தொடக்கக்கல்வி குழுவில் இணைந்திருக்கும் உங்களுக்கு வணக்கங்கள்.
உங்கள் படைப்புக்களை பிறர் பயன்பட பகிர்ந்தமைக்கு நன்றி..
அதனை தொடக்கக்கல்விதளம் www.thodakkakalvi.com
மூலம் பயன்படுத்திய பல்லாயிர ஆசிரியர்களின் சார்பாகவும் நன்றிகள் கோடி.
மேலும் உங்கள் பள்ளி கற்றல்கற்பித்தல் வீடியோக்களை பிறர் பயன்பட தொடக்கக்கல்வி youtube மூலம் பகிர்ந்தமைக்கு நன்றி.
வகுப்பறையில் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி , எளிமையான இனிமையான சூழ்நிலையை மாணவர்களுக்கு உருவாக்கிதருவது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையே.
எனினும் அவ்வாறு தாங்கள் தங்கள் பள்ளிக்கென்று உருவாக்கியவற்றை பிறர் பயன்பட பகிர்ந்தமைக்காக பாராட்டுக்கள்.
அத்தகைய உதவி மனப்பான்மைக்காகவும் மற்றும் நீங்கள் உங்கள் மாணவர்களின் செயல்பாடுகளை எங்களுக்கு அனுப்புவதால், அவர்களை ஊக்குவிக்க ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது.
எங்களுக்கு கிடைக்கும் உதவிகளையும் மற்றும் எங்களால் இயன்றதையும் சேர்த்து ஆர்வமாக பங்கேற்ற மாணவர்களை ஊக்குவிக்க , தொடக்கக்கல்வி குழு மூலமாக சிறு பரிசு அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9Pt-yfftMc1bkqW-avfA9Uw1zOuaJ5uNalHN_eO_-_gNyjfDdwpj0tgD1wFN16MAzmytzKCkkRfnjtOTUrSGfG-PWCNYabQXsVUGVEEYWbrQKCXkiXQOgZ-m48Wddd-mNY7VgjORDfbg/s320/IMG-20180919-WA0000.jpg)
நீங்கள் யாரும் எதையும் எதிர்பார்த்து அனுப்பவில்லை என்று நான் அறிவேன்.
எனினும்
எனினும்
எங்களுக்கு கிடைப்பதை ,
எங்களிடம் இருப்பதை ,
எங்களால் முடிவதை ,
எங்களினால் இயல்வதை
- சிறு பரிசாக அனுப்புகிறோம்.
தற்போது அனைவருக்கும் அனுப்பமுடியவில்லை.
மன்னித்துகொள்ளுங்கள்.
சாத்தியம் என்றால் சாத்தியமாகும் போது பங்கேற்று பகிர்ந்த , பகிரும் , பகிரப்போகும் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பமுயல்கிறேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRGqA8M3ilgfhIsAOsPm3mpV-fKERbjiSDbN-tol9k5ca3EtCrD_HeDyj3GfRJSPj5XZVAEb1hqAcUslQX3yAfzafYSv8rYpMPlf3nicF7nT5G_9iNjobDoNlGEuij5u2t8X75U-OFwQ8/s1600/images.png)
நன்றி
விருப்பம் எனில் மற்ற பள்ளியை ஊக்கப்படுத்த சிறு பரிசு வழங்க நீங்களும் உதவலாம் , ஒத்துழைப்பு தரலாம்
*********************************************************************************************************************************
No comments:
Post a Comment